விடுமுறை கொடுக்காத மேனேஜர்.. கொடூரமாககொன்று வீசிய இளைஞர்

விடுமுறை கொடுக்காத மேனேஜர்.. கொடூரமாககொன்று வீசிய  இளைஞர்
துபாயில் விடுமுறை கொடுக்காத ஆத்திரத்தில் இளைஞர் ஒருவன், மேலாளரை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் உள்ள அல் குவாஸ் தொழில்துறை பகுதியில் உள்ள கேரேஜில், கிர்கிஸ்தானைச் சேர்ந்த 21 வயது இளைஞர் வேலை பார்த்து வந்தான். கடந்த ஜூன் மாதம் அவன் தாய் நாட்டிற்கு செல்வதற்காக தனக்கு விடுமுறை வழங்க வேண்டும் என கம்பெனி மேலாளரிடம் அனுமதி கோரியுள்ளான். ஆனால், அவனது கோரிக்கையை மறுத்த மேலாளர், ஒழுங்காக சென்று வேலையை பார்க்குமாறு அந்த இளைஞரை திட்டி அனுப்பியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த தொழிலாளி, மற்ற ஊழியர்கள் யாரும் இல்லாத நேரம் பார்த்து, தனியாக இருந்த மேலாளரை கத்தியால் கழுத்தை அறுத்தும், சுத்தியலால் பலமாக அடித்தும் கொலை செய்துள்ளான்.

பின்னர் கேரேஜில் இருந்து தப்பிய இளைஞன் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து சொந்த நாட்டிற்கு தப்பிக்க முயற்சித்துள்ளான். ஆனால், கொரோனா பரவல் காரணமாக போதிய அளவிலான விமானம் இல்லாததால் அவனால் செல்ல முடியவில்லை. அதேசமயம் போலீசார் தேடியதால் அவனால் நாடு திரும்ப முடியவில்லை.

மறுநாள் தனது நாட்டின் தூதரகத்திற்கு சென்று, நாடு திரும்ப உதவி செய்யும்படி கூறியிருக்கிறான்.  ஆனால் எந்த விவரத்தையும் கூறாததால் அவனுக்கான அனுமதியை தூதரகம் நிறுத்தி வைத்திருந்தது.

இதையடுத்து, அங்கிருந்து வெளியே வந்த இளைஞனை, போலீசார் கைது செய்தனர். பின்னர் அவன் மீது துபாய் நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, திட்டமிட்டு மேலாளரை கொலை செய்ததாக தொழிலாளி மீது அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *