அமெரிக்கா கடலில், ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை, மேகம் உறிஞ்சி எடுக்கும் அதிசயக் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு புளோரிடாவில், ஒரு சில பகுதிகளில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்கள், கடலில் ஒரு அதிசய நிகழ்வைக் கண்டனர்.
மீனவர்கள், ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்த அதிசயக் காட்சியை கண்டு மெய் சிலிர்த்துப் போய் உள்ளனர். மேலும், இதனைப் படம் பிடித்தவர்கள், ஹாலிவுட் படங்களில் வருவது போன்று இந்தக் காட்சி இருந்ததாகவும், இதுபோன்ற ஒரு காட்சியை இதுவரை பார்த்ததில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.




