கருப்பர் கூட்டம் சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கந்தசஷ்டி பாடல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவான சுரேந்தர், புதுச்சேரி அரியாங்குப்பத்தில் சரணடைந்தார்.இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
இதனிடையே உரிய இ- பாஸ் பெறாமல் புதுச்சேரிக்குள் நுழைந்தது, அனுமதியின்றி கூட்டம் கூடியது மற்றும் மூக கவசம் அணியாமல் இருந்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனவெளி கிராம நிர்வாக அதிகாரி செல்வி அளித்த புகாரை தொடர்ந்து சுரேந்தர் மற்றும் அவருடன் இருந்த 5 க்கும் மேற்பட்டவர்கள் மீது அரியாங்குப்பம் போலிசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.