திரிபுராவில் நீட் தேர்வு முடிவில் குளறுபடி….மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி….

திரிபுராவில்  நீட் தேர்வு முடிவில் குளறுபடி….மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி….

திரிபுராவில்  நீட் தேர்வு முடிவில் குளறுபடியால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மருத்துவ படிப்புக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட உள்ளது. இதை தேசிய தேர்வு முகமையின் இணையதளமான http://ntaneet.nic.in/ இல் பார்க்கலாம். கொரோனா கால கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கடந்த மாதம் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினார்கள்.

ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத முடியாத நிலை இருந்தது. இதையடுத்து இந்நிலையில், கொரோனாவால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு கடந்த 14ம் தேதி தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்வு முடிவுகளை அக்.16-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதன்படி நீட் தேர்வு மீண்டும் 14ம் தேதி நடைபெற்றது ஏற்கனவே தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எழுதலாம் என அறிவிக்கப்பட்டது.

தேர்வை தவறவிட்ட மாணவ மாணவியர் கடந்த 14ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடந்த தேர்வை எழுதினர்.

 சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் எழுதினர். இதையடுத்து இரண்டு கட்டமாக நடந்த நீட் தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியானது.

 தேசிய தேர்வு முகமையின் இணைய தளமான https://www.nta.ac.in/ மற்றும், http://ntaneet.nic.in/ ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று இந்த தகவலை தேர்வு முகமை தெரிவித்தது.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நீட் தேர்வு முடிவு குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் சிறிது குழப்பம் நேர்ந்துள்ளது.

அதாவது திரிபுரா மாநிலத்தில் சுமார்  3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக நீட் தேர்வு முகமை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதேபோல் உத்ராகாண், தெலுங்கானா,உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இந்தக் குளறுபடி நடந்துள்ளது. இதுகுறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *