தன்னை மீண்டும் “TRP கிங் ” என நிருபித்த தல அஜீத்….

தன்னை மீண்டும் “TRP கிங் ” என நிருபித்த தல அஜீத்….
தன்னை மீண்டும் “TRP கிங் ” என நிருபித்த தல அஜீத்….தமிழ் திரையுலகில் தனக்கு என ரசிகர் கூட்டத்தை கொண்டவர் தல அஜீத் குமார்.

தன் ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் தன் படத்தின் ரிலீஸ்ஸின் போது மிகப்பெரிய ஓப்பனிங் கொண்ட ஒரே நடிகர் எப்போதும் பொது வெளியில் அதிகமாக விளம்பரம் படுத்தி கொள்ளாத அஜீத் மற்றவர்களுக்கு உதவி செய்வதையும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார் அப்படி உதவி செய்தாலும் தன் தான் உதவினேன் என்று யாரிடமும் சொல்ல கூடாது என உறுதி வாங்கி கொள்வார். இதனால் தான் இவர் ஒரு நடிகர் என்பதை விட நல்ல மனிதர் என்று அனைவராலும் மதிக்கப்படுகிறார்.

கடைசியாக வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை என்ற படத்தில் நடித்தார் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார் முழுவதும் ஆக்ஷன் கலந்த இந்த படத்தை வித்தியாசமான முறையில் இயக்கி வருகிறார், இந்த படத்திற்கு “யுவன் ஷங்கர் ராஜா”இசை அமைத்து வருகிறார் இதுவரை 40 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்க பட்டுள்ளது நிலைமை சீர் அடைந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடரும்.

இந்நிலையில் 2019 ஆண்டு அஜீத் நடித்து சிவா இயக்கிய திரைப்படம் “விஸ்வாசம்”இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது குறிப்பாக இமான் இசையில் கண்ணனே கண்ணே பாடல் பட்டி தொட்டியெல்லாம் “ஹிட்”அடித்தது.
இந்த படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது “TRP”யிலும் இன்று வரை தமிழ் தொலைகாட்சியில் முதலிடத்தில் உள்ளது. கடந்த வாரமும் இந்த படம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டது. மீண்டும் இந்த படம் “TRP”யில் முதல் இடத்தை பிடித்துள்ளது எப்போது இந்தபடம் தொலைக்காட்சியில் போட்டாலும் முதல் தடவை போடுவது போல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *