ஊரடங்கு அமலில் இருக்கும் நிலைில் அனுமதியின்றி நடிகர் விமல் மற்றும் சூரி கொடைக்கானல் சென்ற விவகாரத்தில் வனக்காவலர்கள் 2 பேரை வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

கொரோனா தொற்று வேகமாக பரவிவந்ததன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி போன்ற முக்கிய சுற்றுலாத்தளங்களுக்கு செல்லவும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி சென்றவாரம் நடிகர் சூரி மற்றும் விமல் கொடைக்கானல் சென்று தங்கி வந்துள்ளனர். மேலும் வனத்துறை காவலர்கள் உதவியுடன் தடைசெய்யப்பட்ட கொடைக்கானல் கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட 4 பேருக்கு வனத்துறையின் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தான் இவர்கள் கொடைக்கானலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவியதையடுத்து, வனத்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதோடு என்ன நடவடிக்கை இதுக்குறித்து எடுக்கப்பட்டுள்ளது என கேள்வியும் எழுப்பபட்டது. இதனையடுத்து இச்சம்வத்திற்கு உதவியாக இருந்த வனக்காவலர்கள் சைமன் பிரவு மற்றும் செல்வம் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்ய்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.