சீறி வந்த வாடிவாசல் காளை… ரசிகர்கள் கொண்டாட்டம்….
தமிழ் திரை படங்களில் விஜய், அஜீத்க்கு அடுத்த படியாக ரசிகர்களை கொண்ட ஒரே நடிகர் என்றால் அது சூர்யாதான் தனது வித்தியாசமான நடிப்பால் தமிழ்ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஒரே நடிகர் என்றால் அது நமது சூர்யாதான்.
அவர் நடிப்பில் கடைசியாக வந்த “காப்பான்” திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது,அடுத்ததாக இறுதிசுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார் ஜி வி பிரகாஷ் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்துள்ளன, கொரோனாவால் படத்தின் வெளியீடு தள்ளிப்போய் கொண்டு இருக்கிறது .
நடிப்பு மற்றும் இல்லாமல் அகரம் பவண்டேசன் மூலம் பல ஏழை மாணவர்களை படிக்க வைக்கும்சூர்யா தனது 45 ஆம் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் சூர்யாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் அடுத்தடுத்த படங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.அதேபோல் சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் “வெற்றிமாறன்” இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல்.கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா கொஞ்சம் வயதான கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் கிளம்பின.

அது மட்டும் அல்லாமல் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.இந்நிலையி ல் “வி கிரியேஷன்ஸ்” கலைப்புலி எஸ். தாணு “வாடிவாசல்” படத்தின் கேரக்டர் “பர்ஸ்ட் லுக்” போஸ்டரை இன்று வெளியிட்டு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.சூர்யாவின் “மாஸ்” லுக் போஸ்ட்டரை கண்டு அவர் ரசிகர்கள் வலைத்தளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்….