தமிழக எம்.பி.க்களுக்கு இந்தியில் பதில் கடிதம் எழுதுவது மத்திய அரசின் மொழிவெறிப் போக்கு… மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…

தமிழக எம்.பி.க்களுக்கு இந்தியில் பதில் கடிதம் எழுதுவது மத்திய அரசின் மொழிவெறிப் போக்கு… மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…
தமிழக எம்.பி.க்களுக்கு இந்தியில் பதில் கடிதம் எழுதுவது மத்திய அரசின் மொழிவெறிப் போக்கு என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக எம்.பி.க்களுக்கு இந்தியில் பதில் கடிதம் எழுதுவது மத்திய அரசின் மொழிவெறிப் போக்கு என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
இந்தியில் கடிதம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசிடம் ஏதேனும் விவரங்கள் கேட்டு ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு, மத்திய உள்துறை உள்ளிட்ட பல அமைச்சகங்களும் தொடர்ந்து இந்தி மொழியில் பதில் கடிதம் எழுதுவது என்பது, இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தையும், அது தொடர்பான அரசாணைகளையும், அப்பட்டமாக மீறி அவமதிப்பு செய்கின்ற மொழியாதிக்க – மொழிவெறி உணர்வையே வெளிப்படுத்துகிறது.

மொழிவெறி
தி.மு.க. உறுப்பினர் வில்சன், மார்க்சிஸ்ட் உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் தொடர்புடைய துறைகளின் அமைச்சர்களுக்கு இதுகுறித்துக் கண்டனத்தைப் பதிவு செய்த பிறகே, ஆங்கிலத்தில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாழ்படுத்திடும் வகையில், சிறிய சந்து பொந்து கிடைத்தாலும் இந்தியைத் திணிப்பதில் பிடிவாதமாக ஈடுபட்டுவரும் மத்திய அரசின் மொழிவெறிப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மதிக்க வேண்டும்
அலுவல் மொழிச் சட்டத்தையும், அதில் தமிழகத்திற்குத் தரப்பட்டுள்ள தனிப்பட்ட உரிமையையும், இனியேனும் மத்திய அரசு மதித்து, அதன்வழி நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *