கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதல்வர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதல்வர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடராஜன் அறிமுகம்
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார்.

முதல்வர் வாழ்த்து
அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து
எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜனுக்கு வாழ்த்துகள். வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *