Saturday, March 7, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய 7 நாள் தனிமை படுத்துதல் அவசியம்…

July 25, 2020
அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் சொந்த செலவில் 7 நாட்கள் தனிமை படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவால் உலகம் முழுவதும் முடங்கியுள்ளன அதே போல் சர்வதேச அளவில் விமான போக்குவரத்தும் முடங்கி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுவர மத்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. ஆனால் இந்த விமானங்களுக்கு அமெரிக்கா அரசு தடை விதித்தது. எனவே அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் தனிப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் விமானங்களை இயக்க மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்தது.

அதன்படி பிரான்சில் இருந்து இந்த மாதம் 18-ந்தேதி முதல் ஆகஸ்டு 1-ந்தேதி வரை 28 விமானங்கள் இந்திய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதைப்போல அமெரிக்காவின் யுனைடெட் விமான நிறுவனம் 18 விமானங்களை வருகிற 31-ந்தேதி வரை இந்திய நகரங்களுக்கு இயக்குகிறது. ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளுடனும் விரைவில் இதுபோன்ற ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளன.

தமிழகத்தில் முககவசம் கட்டாயமா?

அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் ஒட்டப்படும் நோட்டீஸ்

5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கர்நாடகாவில் இன்று முதல் ஊரடங்கு ரத்து! வழக்கம் போல் மக்கள் பணிக்கு செல்ல முதல்வர் உத்தரவு

இந்த திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களில் இந்தியா வரும் பயணிகளை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் சுகாதாரம், விமான போக்குவரத்து, குடியேற்றத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இருகட்ட உடல்நல பரிசோதனை செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி அவர்கள் வந்திறங்கும் விமான நிலையங்கள் மற்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதைப்போல அவர்கள் முதலில் வந்திறங்கும் நகரத்திலேயே சொந்த செலவில் 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு (நிறுவன தனிமைப்படுத்தல்) உட்படுத்தப்படுவார்கள். பின்னர் அவர்களது வீடுகளில் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.

நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு வேண்டுவோர் விமான நிலையங்களில் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து வழங்கி, அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர். டெல்லியை பொறுத்தவரை கர்ப்பிணிகள், குடும்பத்தில் மரணம், தீவிர நோய்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வருவோருக்கு மட்டுமே நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட தமிழக அரசு அனுமதி!!!

Next Post

தொடர்ந்து தாம் செய்யும் எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது -ராகுல்காந்தி தாக்கு!!!

Next Post

தொடர்ந்து தாம் செய்யும் எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது -ராகுல்காந்தி தாக்கு!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version