ரஜினிகாந்துடன் தேர்தலில் இணைந்து போட்டியா?-கமல்ஹாசன் பதில்

ரஜினிகாந்துடன் தேர்தலில் இணைந்து போட்டியா?-கமல்ஹாசன் பதில்

மதுரை விமான நிலையத்தில் மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

தடைகள்
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் தொடங்கிய கட்சி ‘மக்கள் நீதி மய்யம்’. பிரச்சாரத்தை இங்கிருந்து தொடங்குவதுதான் சரியாக இருக்கும் என்பதால் இங்கு தொடங்குகிறோம். கடைசி நிமிடத்தில் சில அனுமதிகள் மறுக்கப்பட்டாலும், நான் ஏற்கனவே சொன்னதுபோல் பொங்கி வரும் புது வெள்ளத்துக்கு முன்னால் சிறு மடைகள் தடை ஆகமாட்டாது.

பதற்றமில்லை
நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டு எப்படியெல்லாம் பிரச்சாரத்துக்குத் திட்டமிட்டு இருந்தோமோ, அதன்படியே எங்கள் பிரச்சாரம் இருக்கும். சில இடங்களில் மட்டுமே தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. எங்களுக்குத் தடைகள் புதிதல்ல. எங்களுக்குப் பதற்றமில்லை. மக்களைச் சென்றடைய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. சட்டத்தை மீறும் எண்ணம் எங்களுக்கு இல்லை. யாருக்கெல்லாம் எங்களது கருத்து குத்தலாக இருக்கிறதோ அவர்கள் தடை செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினியுடன் கூட்டணியா?
மக்கள் நீதி மய்யமும், ஆன்மிக அரசியலும் ஒன்றாகக் களமிறங்க வாய்ப்பு உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டபோது, முன்பே சொல்லியிருக்கிறேன். அணிகள் பிளவுபடும், அணிகள் கூடும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும் என்றார். மேலும், கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்:-

பிரதமருக்கு கண்டனம்
சீனப் பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில் ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே? என்று பதிவிட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *