வீட்டில் நடக்கும் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் செய்யும் தில்லுமுல்லு : பள்ளிகள் போட்ட மாஸ்டர் பிளான்

வீட்டில் நடக்கும் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் செய்யும் தில்லுமுல்லு : பள்ளிகள் போட்ட மாஸ்டர் பிளான்

வீட்டில் நடக்கும் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் செய்யும் தில்லுமுல்லை கண்ட பள்ளிகள் மாஸ்டர் பிளான் செய்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வாயிலாக கல்வி கற்க தேர்வுகளையும் ஆன்லைன் வாயிலாக நடத்தும் சூழல் ஏற்பட்டது. தேர்வெழுதும் போது காப்பி அடித்தல், பெற்றோர்கள் அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தல் போன்ற தில்லுமுல்லு வேலைகளில் மாணவர்கள் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தவிர்க்கும் வகையில் கொல்கத்தா நகரில் உள்ள பள்ளிகள் புதிய முறைகளை அறிமுகம் செய்துள்ளன. மொத்த மதிப்பெண்களில் 50 சதவீதம் நேரடி வைவா முறையில் கேள்விகள் கேட்டு பதிலைப் பெறப்படும்.

பிப்ரவரி 8 முதல் 23ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கேள்வித்தாள் வடிவமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில கணக்குகளைப் போட்டால் மட்டுமே பதிலளிக்க முடியும்.பெற்றோர்களிடம் பேசி அவர்களையும் தேர்வின் கண்காணிப்பாளர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சொல்லிக் கொடுத்தாலோ, பார்த்து எழுதினாலோ எந்தவித பயனும் அளிக்காது

அடுத்த கல்வியாண்டில் போதிய அறிவின்றி செல்லும் அவலநிலை ஏற்படும் என்பது புரிய வைக்கப்படும். சில பள்ளிகளில் 360 டிகிரி பார்வையில் மாணவர்களைக் கண்காணிக்கும் தொழில்நுட்ப வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் விடைகளை முழுவதுமாக எழுதி சமர்பிக்கும் வரை கண்காணிக்க முடியும். புதிய திட்டங்களின் மூலம் மாணவர்கள் பாடத்திட்டங்களை எந்தளவிற்கு புரிந்து கொண்டார்கள் புரியவில்லை. ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய குறித்து தெளிவான பதில்கள் கிடைக்கும். மாணவர்களின் கல்வியை மேம்படுத்த பெரிதும் உதவும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *