தமிழகம் முழுவதும் இன்று… பேருந்து நிலையங்களில் மக்கள் தவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் இன்று… பேருந்து நிலையங்களில் மக்கள் தவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.

அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஊதிய உயர்வு மற்றும் பணி ஓய்வு பணப்பயன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

அதன்படி சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. அதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்போர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி சென்னையில் 40 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மதுரையில் 15%, சேலத்தில் 60 சதவீதம்,பல்வேறு பகுதிகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரமாக மக்கள் காத்திருக்கின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *