பிள்ளைகள் தனியறையில் பெற்றோர் தனியறையில்… ஏசி மின்கசிவால் உயிரிழந்த இருவர்.. காரணம் என்ன?

பிள்ளைகள் தனியறையில் பெற்றோர் தனியறையில்… ஏசி மின்கசிவால் உயிரிழந்த இருவர்.. காரணம் என்ன?

மதுரை ஆனையூர் அருகே இரவில் தூங்கி கொண்டிருந்தபோது ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதில் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆனையூர் அருகே உள்ள எஸ்விபி. நகரைச் சேர்ந்த சக்திகண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பிள்ளைகள் இருவரும் கீழே உள்ள அறையில் தனியே உறங்கிய நிலையில், மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் படுத்து தூங்கியுள்ளனர்.

இந்நிலையில், நள்ளிரவில் வீட்டு அறையில் உள்ள ஏசியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதால் கரும்புகை சூழ்ந்த்துள்ளது. இதனால் அறையினுள் இருந்து இருவரும் வெளியே வர முயன்றுள்ளனர். ஆனால் தீ பற்றி எரிய தொடங்கி இருவரது உடலிலும் தீப்பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து சக்தி கண்ணனின் மகன் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து இருவரது உடலையும் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கூடல்புதூர் காவல் துறையினர் குழந்தைகள் தனியறையில் உறங்கியது ஏன்? உடலில் வேறு ஏதேனும் காயங்கள் உள்ளதா, இது தற்கொலை முயற்சியா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *