எடிட்டருக்கு நயன்தாரா மேலே என்ன கோவமோ? அட்டைப்படமே இவ்வளவு மோசமா இருக்கே?!

எடிட்டருக்கு நயன்தாரா மேலே என்ன கோவமோ? அட்டைப்படமே இவ்வளவு மோசமா இருக்கே?!

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாராதான் தமிழ் சினிமா மட்டுமல்ல தென்னிந்திய சினிமா நடிகைகளிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை.

கதாநாயகியை முன்னிலைப் படுத்தும் கதை என்றால் தயாரிப்பாளர்கள் நாடுவது நயன்தாராவை தான். நடிப்பில் பெரிதாக எந்த வித்தியாசத்தையும் காட்டவிட்டாலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த நயன்தாரா, தளபதி விஜய் வெறியரான அட்லி இயக்கும் படத்தில் மூலம் நாயகியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதில், ஷாருக்கான் நாயகனாக நடிக்கின்றார்.

இந்நிலையில் போர்ப்ஸ் இந்தியா பத்திரிகையின் அட்டைப்படத்தில் நயன்தாராவின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ரசிகர்கள் தெரிவிக்கும் போது, போர்ப்ஸ் போன்ற பெரிய பத்திரிகையின் அட்டைப் படத்தை பார்த்தால் போட்டோஷாப் செய்தது போன்று மோசமாக இருக்கிறது. நயன்தாராவை ஒழுங்காகவே புகைப்படம் எடுக்கவில்லை. அவர் வேறு யார் மாதிரியோ தெரிகிறார். அவருக்கு அணிந்திருக்கும் உடையும் மோசம். ஒரு லேடி சூப்பர் ஸ்டாரை இப்படித்தான் மோசமாக காட்டுவதா என்று கோபமாகியுள்ளனர் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *