எல்லாரும் ஃப்ரெண்ட்ஸாவே இருந்தா என்ன பண்றது?… இருக்கிற எல்லா சின்னத்திலேயும் ஒரே குத்தாய் குத்திய வாக்காளர்!!

எல்லாரும் ஃப்ரெண்ட்ஸாவே இருந்தா என்ன பண்றது?… இருக்கிற எல்லா சின்னத்திலேயும் ஒரே குத்தாய் குத்திய வாக்காளர்!!

தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தன. அவற்றின் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் யார் மனதும் நோகாத வகையில் அனைத்து சின்னத்திலும் வாக்களித்திருக்கிறார் வாக்காளர் ஒருவர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி யார் ராசா நீ என மக்களை புருவம் உயர்த்த வைத்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *