Sunday, September 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

தமிழ் சினிமாவின் ‘பொன்மகள்’ ஜோவிற்கு பிறந்தநாள்!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

October 18, 2021


ஜோ என நம்மால் செல்லமாக அழைக்கப்படும் ஜோதிகாவின் இயற்பெயர் சாதனா. திரைப்பட தயாரிப்பாளரின் மகளான ஜோதிகா சைக்காலஜி படித்துள்ளார். மும்பையில் பிறந்த இவர் தமிழ்நாட்டு மருமகளாக மாறி தமிழ் சினிமாவை வெற்றி படங்கள் கொடுத்து கலக்கி வருகிறார். ஜோதிகாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர்.

1990-களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்த நக்மாவின் தங்கை ஜோதிகா. பிரியதர்ஷன் இயக்கத்தில் 1998-ல் வெளியான ‘டோலி சஜா கே ரக்னா’ என்னும் இந்தி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் முதல்முறையாக 1999-ல் அஜித்-சிம்ரன் நடிப்பில் வெளியான ‘வாலி’ படத்தில் கெளரவத் தோற்றத்தில் நடித்திருந்தாலும் கதையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக அமைந்திருந்தது. அதே ஆண்டு வசந்த் இயக்கத்தில் ஜோதிகா நாயகியாக நடித்த ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ அதே ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தில் ஜோதிகாவின் துருதுருப்பான தோற்றமும் நடிப்பும் கவனம் ஈர்த்தன. குறிப்பாக பாடல்களில் அவருடைய அழகான பாவங்கள், வட்ட முகம். க்யூட்டான நடனம் என தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அவரைப் பிடித்துப்போவதற்கான அம்சங்கள் அவரிடம் வெளிப்பட்டன.

2000-ம் ஆண்டில் விஜய்யுடன் ‘குஷி’ படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு ஜோதிகாவுக்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. அதில் நாயகனுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வேடம் அவருக்கு அமைந்திருந்தது. அந்தக் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக உள்வாங்கி அவரும் சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படம் ஜோதிகாவை ஒரு நாயகியாக மட்டுமல்லாமல் நடிப்புத் திறமை மிக்கவராகவும் அடையாளப்படுத்தியது. ‘குஷி’ படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார் ஜோதிகா. அதே ஆண்டில் அஜித்துடன் ‘முகவரி’, கமல் ஹாசனுடன் ‘தெனாலி’ ஆகிய படங்களும் மிகப் பெரிய வெற்றிபெற்றன. இதே ஆண்டில் ஜோதிகாவை நடிகையாக அறிமுகப்படுத்திய பிரியதர்ஷன் இயக்கத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்த ‘சிநேகிதியே’ என்னும் திரைப்படத்தில் முதன்மைக் கதாநாயகியரில் ஒருவரான ஜோதிகா நடித்திருந்த விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

2001-ல் மணி ரத்னம் தயாரிப்பில் அழகம் பெருமாள் இயக்கிய ‘டும் டும் டும்’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார் ஜோதிகா. அதில் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த புத்திசாலிப் பெண்ணாக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். படமும் விமர்சகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்றது. எழில் இயக்கத்தில் அஜித்துடன் அவர் நடித்த ‘பூவெல்லாம் உன்வாசம்’ படமும் வெற்றிபெற்றது. இந்தப் படத்திலும் வலுவான கதாநாயகி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் ஜோதிகா. ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்குநராக அறிமுகமான ’12பி’ படத்தில் ஜோதிகாவும் அவருடைய சமகாலப் போட்டியாளரான சிம்ரனும் இரண்டு நாயகியராக நடித்திருந்தனர்.

2003-ல் விக்ரமுடன் ‘தூள்’, சூர்யாவுடன் ‘காக்க காக்க’, விஜய்யுடன் ‘திருமலை’ என ஜோதிகா நடித்த மூன்று படங்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக கெளதம் மேனன் இயக்கிய ‘காக்க காக்க’ படத்தில் உயர்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரை மாயா கதாபாத்திரம் ஜோதிகா ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த கதாநாயகி கதாபாத்திரங்களில் ஒன்றானது. ‘குஷி’க்குப் பிறகு பல வகைகளில் ஜோதிகாவின் திரைவாழ்வில் மிக முக்கியமான படம் ‘காக்க காக்க’.
தொடர்ந்து சூர்யாவுடன் ‘பேரழகன்’ படத்தில் நகரத்து நவீனப் பெண்ணாகவும் பார்வையற்ற கிராமத்துப் பெண்ணாகவும் இரண்டு வேடங்களில் முதல்முறையாக நடித்திருந்தார் ஜோதிகா. அந்தப் படமும் வெற்றிபெற்றது. தன்னைவிட வயதில் இளையவரான சிலம்பரசனுடன் அவர் நடித்த ‘மன்மதன்’ படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

2005-ல் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘சந்திரமுகி’ படத்தில் தலைப்புக் கதாபாத்திரத்தில் நடித்தார் ஜோதிகா. முதலில் சிம்ரனுக்குச் சென்ற இந்த வாய்ப்பு அவர் அப்போது கர்ப்பத் தரித்திருந்தார் என்பதால் விலகிக்கொள்ளவே ஜோதிகாவிடம் வந்தது. ஸ்ப்லிட் பர்சனாலிடி என்னும் உளவியல் சிக்கலால் பாதிக்கப்பட்ட பெண்ணாக, நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நாட்டியக்காரி சந்திரமுகியாக தன்னை கற்பனை செய்துகொண்டு அவராகவே வாழ்பவராகச் சிக்கலும் சவாலும் நிரம்பிய கதாபாத்திரத்தில் வெகு கச்சிதமாகப் பொருந்தினார் ஜோதிகா. ‘ராரா’ பாடலில் அவர் பரதம் ஆடியதும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. படத்தில் ‘கங்கா சந்திரமுகியா மாறினா’ என்று ஜோதிகாவின் கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு வசனம் இடம்பெறும். நிஜத்திலும் ஜோதிகா சந்திரமுகியாகவே மாறியிருந்தார் என்று சொல்லும் அளவுக்கு கதாபாத்திரமாக முழுமையாக உருமாற்றம் அடைந்தார். அந்தப் படம் மிகப் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. ஜோதிகாவுக்கும் திரைவாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
தொடர்ந்து சிலம்பரசனுடன் ‘சரவணன்’, சூர்யாவுடன் கமல் ஹாசனுடன் ‘வேட்டையாடு விளையாடு’, சூர்யாவுடன் ‘சில்லுன்னு ஒரு காதல்’ என வெற்றிப் படங்கள் அமைந்தன. இவற்றில் ‘வே.வி’ படத்தில் கைக்குழந்தையுடன் கணவரைப் பிரிந்து வாழும் பெண்ணாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அடுத்ததாக ராதா மோகன் இயக்கத்தில் ‘மொழி’ திரைப்படத்தில் பேசும் திறனற்ற பெண்ணாக அதே நேரம் அது குறித்த பரிதாபத்தை எதிர்பார்க்காத சுயசார்பும் தன்னம்பிக்கையும் மிக்க பெண்ணாக நடித்திருந்தார் ஜோதிகா. பல உள்முடிச்சுகள் கொண்ட, பார்வையாலும் முகபாவங்களாலுமே அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்த வேண்டிய சவால்மிக்க இந்தக் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருந்த விதத்தில் அனைவரும் கவரப்பட்டனர். ஜோதிகாவின் நடிப்புத் திறமை முழுமையாக வெளிப்பட்ட படம் என்று ‘மொழி’யைச் சொல்லலாம். அந்தப் படம் அனைத்து வயதினராலும் ரசிக்கப்பட்ட தரமான வெற்றிப் படமாகவும் அமைந்தது.

அடுத்ததாக வெளியான ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் திருமணமான ஆடவரைக் கவர்ந்து மோசடி செய்யும் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்திருந்தார் ஜோதிகா. கெளதம் மேனன் இயக்கிய இந்தப் படத்திலும் ஜோதிகாவின் நடிப்பில் முற்றிலும் வேறோரு பரிமாணம் வெளிப்பட்டது.
தன்னுடன் நான்கு படங்களில் இணைந்து நடித்த நடிகர் சூர்யாவைக் காதலித்த ஜோதிகா 2007-ல் அவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு 2015-ல் வெளியான ’36 வயதினிலே’ திரைப்படத்தில் ஜோதிகாவின் மறுவருகை நிகழ்ந்தது. மலையாளத்தில் வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தில் மஞ்சு வாரியர் ஏற்று நடித்திருந்த மையக் கதாபாத்திரத்தில் தமிழில் ஜோதிகா நடித்திருந்தார். இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்று ஜோதிகாவின் இரண்டாம் இன்னிங்க்ஸுக்கு வெற்றிகரமான தொடக்கமாக அமைந்தது.

பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ திரைப்படத்தில் துணிச்சலும் தீரமும் மிக்க காவல்துறை அதிகாரியாக நடிப்பில் மற்றுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருந்தார். மணி ரத்னம் இயக்கிய ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தியில் வித்யா பாலன் நடித்த ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ்ப் பதிப்பான ‘காற்றின் மொழி’ படத்தில் நடித்தார். ‘ராட்சசி’ படத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக முதன்மைக் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த விதம் பரவலான கவனம் ஈர்த்தது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிறந்த படங்களில் நடித்துள்ளார் ஜோ. ஒன் டூ த்ரி என்பதே ஜோவின் முதல் தெலுங்கு படம் இதில் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ளார்.மீண்டும் சந்திரஞ்சீவியுடன் காய் கோர்த்து நடித்த தாகூர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.அதை தொடர்ந்து ராகவ லாரன்ஸ் இயக்கிய மாஸ் படத்தில் நாகர்ஜுனவுடன் இணைந்து நடித்தார்.அதே படம் தமிழில் வீரன் என்ற பெயரில் வெளியானது.ரவி வர்மா தயாரித்த ஷாக் திரைப்படத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்தார்.

பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு உணவு வழங்கிய வழக்கறிஞர் B.தனசேகர்

மஞ்சு வாரியரின் மனம் லயிக்கும் போட்டோஸ்

திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு நடிகர் சூர்யா உருக்கம்

பேரழகன், சந்திரமுகி, மொழி ஆகிய படங்களுக்காக தமிழ்நாட்டின் சிறந்த நடிகைக்கான விருதையும், காக்க காக்க படத்திற்காக சர்வதேச தமிழ் திரைப்பட விருதையும் பெற்ற ஜோ, சந்திர முகி திரைப்படத்திற்காக கலைமாமணி விருதை பெற்றார்.
வாலி திரைப்படத்திற்காக சிறந்த தென்னிந்திய படத்திற்கான விருதையும், குஷிக்காக தமிழின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்று அசத்தினார். 36 வயதினிலே படத்திற்காக தென்னிந்திய சிறந்த நடிகைக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் ஜோதிகா.

‘ஜாக்பாட்’, ‘தம்பி’ படங்கள் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஆக , ஓடிடியில் நேரடியாக வெளியான முதல் தமிழ்த் திரைப்படமான ‘பொன்மகள் வந்தாள் அவருக்கான தனி அடையாளத்தை கொடுத்தது. தற்போது ஓடிடியில்  ஜோதிகாவின் 50வது படமான உடன்பிறப்பே வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கேரளாவை புரட்டி எடுக்கும் கனமழை… இதுவரை 27 பேர் பலியான சோகம்!

Next Post

விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம்; நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்!!

Next Post

விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம்; நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026

குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கால அவகாசத்தில் மாற்றம்; புதிய விதி என்ன சொல்கிறது?

September 18, 2026

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

September 18, 2026

விஜய் அரசின் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்; ஒரு மசோதா மட்டும் குடியரசுத் தலைவரிடம் — என்னென்ன மசோதாக்கள்?

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version