ரஜினிகாந்த் ஆளுநர் சந்திப்பு… கே.ஜி.பாலகிருஷ்ணன்  கடும் கண்டனம்

ரஜினிகாந்த் ஆளுநர் சந்திப்பு… கே.ஜி.பாலகிருஷ்ணன்  கடும் கண்டனம்

ரஜினிகாந்த், ஆளுநர் சந்திப்பு குறித்து பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நேற்று ஆளுநரை சந்தித்தப்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆளுநரிடம் அரசியல் குறித்து பேசினேன். ஆனால் அதைப்பற்றி சொல்ல இயலாது என்றார். அரிசி, கோதுமை, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி உயர்த்தியது பற்றிய கேள்விக்கு ’நோ கமெண்ட்ஸ்’ என்று பதிலளித்தார். இந்த பேட்டி தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டங்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? இனியும் பொறுப்போமா? தமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து ‘தாங்கள் அரசியல் பேசியதாகவும் அந்த அரசியலை ஊடகங்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியாது’ எனவும் திரு ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பது வித்தியாசமாக உள்ளது. ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான கட்சி அலுவலகம் அல்ல. ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், ஊடகங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் ஆளுநருக்கு எதனால் வந்தது.

Image

இதன் மூலம் அரசியல் சட்ட விதிக்கு விரோதமான முறையில், ஆளுநர் அலுவலகம் ஒரு அரசியல் கூடமாக மாற்றப்பட்டுள்ளது உறுதியாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு மாற்றாக, ஒரு போட்டி அரசு நடத்தும் அலுவலகமாக ஆளுநர் மாளிகை மாற்றியது, கண்டனத்திற்கு ஆளானது. இப்போது அதன் அடுத்த கட்டமாக, அரசியல் அலுவலகமாகவும் அது மாற்றப்படுகிறது. இது தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமானது. தொடர்ந்து அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக்கொள்ளப் போகிறோம்? இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *