இல்லத்தரசிகளுக்கு ₹1,000 உடனே வழங்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

இல்லத்தரசிகளுக்கு ₹1,000 உடனே வழங்க வேண்டும் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

இல்லத்தரசிகளுக்கு ₹1,000 என்ற வாக்குறுதியை திமுக இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது ஏற்புடையதல்ல என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

உருமாறிய' மநீமவுக்கு கமல்ஹாசன் எந்த வகை 'தடுப்பூசி' செலுத்துவது உகந்தது? -  ஒரு ரிப்போர்ட்!|What should Kamal Haasan do now to improve his party makkal  neethi maiyam?

இதுதொடர்பாக, வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஊதியம் என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென நாட்டிலேயே முதன்முதலில் குரல் கொடுத்தவர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன். இந்த திட்டத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து, பல்வேறு மாநில அரசியல் கட்சிகளும் இத்திட்டத்தைக் கையில் எடுத்தன.இந்நிலையில், ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்று நேற்று தாக்கல் செய்யப்பட்ட புதுச்சேரி நிதிநிலை அறிக்கையில், அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்பதுடன், புதுச்சேரி அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.

அதேசமயம், இந்த திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அளித்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திமுக, இன்னமும் பிடிகொடுக்காமல் உள்ளது ஏற்புடையதல்ல. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *