யாஷ் துல் 193 ரன்கள் எடுத்து அசத்தல்

யாஷ் துல் 193 ரன்கள் எடுத்து அசத்தல்

புதுச்சேரியில் நடைபெற்று வரும் துலீப் கோப்பைப் போட்டியில் யாஷ் துல் 193 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார்.

The Story of Yash Dhull: A Rising Star From West Delhi

கிழக்கு, வடக்கு மண்டலங்கள் மோதிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கிழக்கு மண்டலம் 397 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடி வரும் வடக்கு மண்டலம் 100 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 388 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இந்த போட்டியில், 19 வயதான யாஷ் துல் 193 ரன்களை எடுத்து அசத்தினார்.

நடப்பு ஆண்டு (2022) யு-19 உலகக் கோப்பைப் போட்டியை இந்திய அணி வென்றபோது கேப்டனாக இருந்தவர் யாஷ் துல். ரஞ்சி கோப்பையின் அறிமுகப்போட்டியில் இரு சதங்களையும், பின்னர் இரட்டை சதத்தையும் அடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது துலீப் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *