உலகின் 2வது பணக்காரரானார் அதானி!

உலகின் 2வது பணக்காரரானார் அதானி!

உலக பணக்காரர்கள் வரிசை பட்டியலில் கவுதம் அதானி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Modi risks turning India into a nation of gangster capitalists - Nikkei Asia

இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலக பணக்காரர்கள் வரிசை பட்டியலில் 3ம் இடத்தை பிடித்திருந்தார். தற்போது அதானி டிரான்ஸ்மிஷன், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உச்சத்தில் இருந்து வருவதால் அதானியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, அதானியின் நிகர சொத்து மதிப்பு  ₹12,45,000 கோடியாக (155.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 70 பில்லியன் டாலர் அதிகரிப்பு) உயர்ந்துள்ளது.

இதன்மூலம், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளார். விரைவில் அவர் முதலிடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, எலான் மஸ்க் ₹21,88,000 கோடியுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *