சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!

சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!

தெற்கு ஆசியாவின் கால்பந்து சாம்பியன்ஷிப்ன் இறுதி போட்டியில் குவைத் அணியை பெனால்டி ஷூட்அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் விழ்த்தி இந்திய அணி வென்றது.இந்திய அணியின் வெற்றியில் கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து முக்கிய பங்காற்றி உள்ளார். தெற்க்கு‌ ஆசியாவின் கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையினை இந்திய அணியானது 9-வது முறையாக வென்று ஒரு புதிய சாதனையினை படைத்து உள்ளது.சாதனையை படைத்த நமது இந்திய அணியினருக்கு சமூக ஊடகங்கள் மூலமாக பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நனத நிலையில் சாதனை படைத்த இந்திய அணியை முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் சிறப்பு பதிவிட்டு வாழ்த்தியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள அந்த பதிவில்”இது ஒரு மிகப்பெரிய வெற்றி வலிமை மற்றும் உறுதிப்பாடு உடன் விளையாடியதற்கு கிடைத்த ஒரு வெகுமதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது ஒரு அற்புதமான காட்சி”என்றும் சமூக ஊடகம் வாயிலாக தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *