நம்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைகள், மற்றும் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என்று அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, புறநோயாளிகளின் பிரிவில் பொறுப்பு டாக்டர்கள் எல்லாம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் கட்டாயமாக பணியில் இருக்க வேண்டும். மேலும் பிற மருத்துவர்கள் எல்லாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக உள் நோயாளிகள் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.