உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தை பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாமன்னன் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் பாராட்டி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் , மாரி செல்வராஜின் கலை பயணத்தில் அற்புதமான ஒரு படைப்பு மாமன்னன். வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாகவே அமையும் முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில் முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் நடிகர் வடிவேலு இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என அவர் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.