Wednesday, October 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்

கர்ப்பப்பையை ஆரோக்கியமாக வைக்கும் கருப்பு உளுந்தகளி எப்படி செய்வது?

செய்தி அலை by செய்தி அலை
July 13, 2020 8:37 PM GMT+5:30 - Updated on July 14, 2020 10:49 PM GMT+5:30

இன்றைய இளம்பெண்கள் அதிக வலி மிகுந்த மாதவிடாயை எதிர்கொள்கிறார்கள். இந்த நேரத்தில் கர்ப்பப்பைக்கு பலமளிக்கும் உணவுகள் மிகவும் அவசியம்.

பெண் பிள்ளைகளின் கர்ப்பப்பை வளர்ச்சி பூப்படையும் காலம் முதல் தொடங்குகிறது. ஆரம்பம் முதல் இவை சீராக செயல்படும் போது சீரான மாதவிலக்கு, சிக்கலில்லாமல் கருத்தரித்தல், மாதவிடாய் நிற்கும் காலத்தில் அதிக உபாதை இல்லாமை, மாதவிடாய் காலங்களிலும் வலி உபாதை குறைவாக இருப்பது போன்றவை உண்டாகும்.

வார இறுதியில் நீண்ட தூக்கம்: வாரத்தின் சோர்வு தீருமா?

தீபம் ஏற்றுங்கள்; ஜன்னலையும் திறந்து வையுங்கள்!

100 வயதைக் கடந்தவர்கள் 1 லட்சத்துக்கும் மேல்! ஜப்பானில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது?

முன்னோர்களின் உணவு முறையில் மாதவிடாய் கால உணவும், கர்ப்பப்பை பலமாக்கும் உணவுக்கும் தனி இடம் உண்டு. இவை ஒன்றே பெண்களின் கர்ப்பப்பைக்கு போதிய பலத்தையும் சத்தையும் கொடுத்துவிடக்கூடியவை. அப்படியான பொருள்களில் மிக முக்கியமானது கருப்பு உளுந்து.

தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலியை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். பெண்களுக்கு மிகவும் அவசியமானது கருப்பு உளுந்து. பெண்களின் இடுப்பு எலும்பை வலுப்படுத்தும். குழந்தை பெற்ற பெண்களுக்கு கருப்பு உளுந்தில் உணவு செய்து கொடுப்பது மிகவும் நல்லது.

தற்போது பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை உளுந்தின் பயன்பாட்டுக்கு பிறகு கறுப்பு உளுந்தின் பயன்பாடு குறைந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். கருப்பு உளுந்தை சாதாரணமாக எடைபோட்டுவிட வேண்டாம். இந்த உளுந்தில் இருக்கும் சத்துகளை உடல் முழுமையாக கிரகிக்கப்படுகிறது.

இதில் கால்சியம், புரதம், பொட்டாசியம், கரையும் தன்மை கொண்ட நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, பி.காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஏ, ஃபோலிக் ஆசிட், பாஸ்பரம், இரும்புச்சத்து நிறைந்தவை என்பதோடு இவை முழுமையாக உடலுக்கு கிடைக்ககூடிய சத்தும் கூட. தீரா நோயான நீரிழிவு முதல் இதய நோய்,சரும பிரச்சனைகள், செரிமானம், ரத்த சோகை, எலும்பு வலுவாக, உடலுக்கு எதிர்ப்பு சக்தி பெற அனைத்துக்குமே உதவக்கூடியது.

மற்ற பருப்புகளில் இல்லாத அராபினா கேலக்டான் என்னும் வேதிப்பொருள் இதில் இயற்கையாக உண்டு. இவை தான் உளுந்து மாவை மெத்தென்று வைக்கிறது.

தற்போது பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை உளுந்தின் பயன்பாட்டுக்கு பிறகு கறுப்பு உளுந்தின் பயன்பாடு குறைந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். கருப்பு உளுந்தை சாதாரணமாக எடைபோட்டுவிட வேண்டாம். இந்த உளுந்தில் இருக்கும் சத்துகளை உடல் முழுமையாக கிரகிக்கப்படுகிறது.

இதில் கால்சியம், புரதம், பொட்டாசியம், கரையும் தன்மை கொண்ட நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, பி.காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஏ, ஃபோலிக் ஆசிட், பாஸ்பரம், இரும்புச்சத்து நிறைந்தவை என்பதோடு இவை முழுமையாக உடலுக்கு கிடைக்ககூடிய சத்தும் கூட. தீரா நோயான நீரிழிவு முதல் இதய நோய்,சரும பிரச்சனைகள், செரிமானம், ரத்த சோகை, எலும்பு வலுவாக, உடலுக்கு எதிர்ப்பு சக்தி பெற அனைத்துக்குமே உதவக்கூடியது.

மற்ற பருப்புகளில் இல்லாத அராபினா கேலக்டான் என்னும் வேதிப்பொருள் இதில் இயற்கையாக உண்டு. இவை தான் உளுந்து மாவை மெத்தென்று வைக்கிறது. இது மாதவிடாய் கால பெண்களுக்கு எப்படி உறுதுணையாக இருக்கிறது என பார்க்கலாம்.

கருப்பு உளுந்தகளி கிண்டுவது பாட்டிகளுக்கு கை வந்த கலை. அவ்வளவு பிரயத்தனம் கொள்ளாமல் எளிதான முறையில் செய்வது எப்படி என்பது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து – 1 டம்ளர்,

பச்சரிசி மாவு – கால் டம்ளர் (உளுந்து வாசனை அதிகம் தெரியாமல் இருக்க)

நல்லெண்ணெய்- 1 டம்ளர்,

பனங்கருப்பட்டி – 1 டம்ளர்,

சுக்குப்பிடி, ஏலப்பொடி – தலா அரை டீஸ்பூன்

கருப்பு உளுந்தை சுத்தம் செய்து கழுவி வெயிலில் காயவைக்கவும். காய்ந்ததும் வாணலியில் எண்ணெய்விடாமல் வறுக்கவும். உளுந்தின் வாசனை போனால் போதுமானது. பிறகு அதை மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். கட்டியில்லாமல் இருக்க வேண்டும். அல்லது மிஷினில் கொடுத்தும் மொத்தமாக அரைத்து கொள்ளலாம்.

பனங்கருப்பட்டியில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பனங்கருப்பட்டி கரைந்ததும் அதில் உளுந்துமாவு சிறிது சிறிதாக சேர்த்து பச்சரி மாவும் சேர்த்து நன்றாக கிளறவும். இடையில் நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டே இருக்கவேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு நல்லெண்ணெய் சேர்க்கிறோமோ அவ்வளவு நல்லது. இவை நன்றாக கலந்து திரண்டு அல்வா பதத்துக்கு வரும்போது இறக்கி சுக்குப்பொடி, ஏலப்பொடி கலந்துவிடவும். இளஞ்சூட்டோடு இருக்கும் போதே உருண்டையாக பிடித்துவிட வேண்டும். மாதவிடாய் நாட்களில் தினமும் மூன்று உருண்டை என மூன்று நாட்கள் சாப்பிடலாம் அல்லது ஒரே வேளையில் களி போல் இதை மட்டுமே சாப்பிடலாம்.

கர்ப்பப்பை வளர்ச்சியின் போது இடுப்பு எலும்பும் வலுவாக்க வேண்டும். பேறுகாலத்தில் இவை மிகவும் தேவை. இடுப்பு எலும்பு வலுவடையவும், மாதவிடாய் நேரத்தில் இடுப்பு வலி இல்லாமல் இருக்கவும் இவை உதவுகிறது.

மெனோபாஸ் காலங்களில் இரும்புச்சத்து குறைபாடும், கால்சிய குறைபாடும் இணைந்து எலும்புகளை மென்மையாக்கி ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனையில் கொண்டுவந்துவிடும். இதை ஈடுசெய்வதிலும் கருப்பு உளுந்தங்களி பெரிதும் உதவுகிறது. அதோடு மாதவிலக்கு நாட்களில் பெண்களுக்கு கொழுப்பு மற்றும் புரதம் தேவையான அளவு கிடைக்க வேண்டும். இவை மாதவிடாய் அவஸ்தையை பெருமளவு குறைத்துவிடும். அவை கருப்பு உளுந்தில் நிறைந்திருக்கிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம்

Next Post

வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புதல்

Next Post

வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

டைகர் ஷ்ராஃப் மீது தாக்குதல் நடத்த வெளிநாட்டு வேலை ஆசை: விசாரணையில் தகவல்!

October 20, 2026 1:28 PM GMT+5:30

டெல்லி தொழிற்சாலைகளில் தீ விபத்து: காலை 10:30 மணிக்குக் கட்டுக்குள் வந்தது!

October 20, 2026 12:32 PM GMT+5:30

ஆசிய பாரா விளையாட்டு: போட்டிச் சாதனையுடன் தங்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜி!

October 20, 2026 12:17 PM GMT+5:30

சவுதி முதலீட்டாளர் மாநாடு 2027-க்கு ஒத்திவைப்பு!

October 20, 2026 12:07 PM GMT+5:30

இந்தியா–நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம் அமல்: இந்திய ஏற்றுமதிக்குச் சுங்கவரி நீக்கம்!

October 20, 2026 11:53 AM GMT+5:30

ரூபியோ இன்று இந்தியா வருகை: ஜெய்சங்கருடன் வர்த்தகம், எரிசக்தி குறித்து பேச்சு!

October 20, 2026 10:34 AM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version