மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று வெள்ளி கிழமை தேதி 30.04.2021, நல்ல நேரம் :காலை 9.30 -10.30, மாலை 4.30 – 5.30, ராகுகாலம் காலை 10.30 -12.00 , எமகண்டம் மாலை 3.00 – 4.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்:
சிறிது மனஅழுத்தமாக காணப்படும். எதிர்பாராத நபர்களால் வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.குடும்பத்தினரின் வருகையால் சிறு செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே அமையும்.
ரிஷபம்:
சேமிக்க வேண்டுமென்று எண்ணம் தோன்றினாலும்,சில பல தேவை இல்லாத காரணங்களினால் அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. திடீர் பயணங்களால் வாழ்வில் நன்மைகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்:
கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி மேம்படும். நண்பர்களின் உதவி இன்று உங்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.வாகன போக்குவரத்துகளில் கவனமாய் இருத்தல் நல்லது. மனதில் தோன்றும் தேவை இல்லாத அழுத்தங்களை தவிர்த்தல் நல்லது.
கடகம்:
சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டாகும். பயணம் கடினமாக மன அழுத்தம் தருவதாக அமையும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவார்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும்.
சிம்மம்:
நிலம் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்ப வாழ்வுக்கு தேவையான நேரத்தை அளிப்பது நன்மை அளிக்கும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கைகூடும். வாகன போக்குவரத்துகளில் கவனமாய் இருத்தல் நல்லது.
கன்னி:
வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார்கள். வேலையில் ஏற்படும் அழுத்தம் மனநிம்மதியை கெடுக்க நேரிடும். புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளின் மூலமாக நன்மைகள் ஏற்படும்
துலாம்:
எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு பக்கபலமாய் இருப்பார்கள். வேலை பார்க்கும் நிறுவனங்களில் நல்ல பெயர் கிடைக்கும்.நண்பர்களுடன் ஏற்படும் பேச்சுவார்த்தையை பொறுமையுடன் கையாள்வது நல்லது.
விருச்சிகம்:
பூர்விகம் சம்பந்தமான சில சொத்து வகைகளில் சகோதர சகோதரிக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். நிதி மற்றும் வரவு செலவு கணக்குகளில் கவனம் தேவை.
தனுசு:
குழந்தைகளின் முன்னேற்றத்தில் அதிகம் கவனம் செலுத்தி சில செலவுகள் ஏற்படலாம். பண விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. புது முயற்சிகளை இன்று செயல்படுத்தாமல் இருப்பது நல்லது. வேலை பார்க்கும் நிறுவனத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள்.
மகரம் :
உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம். வாகன பராமரிப்பு செலவு கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலையாக காணப்படும். உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது.
கும்பம்:
வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். புது முயற்சிகளை இன்று செயல்படுத்தாமல் இருப்பது நல்லது. மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
மீனம்:
உங்கள் வாழ்வில் குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேற அதிக வாய்ப்புகள் உள்ளது. வேலையில் முன்னேற்றங்கள் கருதி சில பயணங்களை மேற்கொள்வீர்கள் .