குரு வக்ர பெயர்ச்சி… அதிர்ஷ்டம் அடிக்க போகும் ராசிகள்

குரு வக்ர பெயர்ச்சி… அதிர்ஷ்டம் அடிக்க போகும் ராசிகள்

குருபகவானின் வக்ர சஞ்சாரத்தினாலும், பார்வையினாலும் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படப்போகிறது.

தேவகுரு என்று சொல்லக்கூடிய குருபகவான் ஜூலை 29ம் தேதி முதல் நவம்பர் 24ம் தேதி வரை சுமார் 4 மாத காலம் உத்தரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த சஞ்சாரத்தால் சிலரது வாழ்க்கையில் அதிர்ஷ்டங்களும், திடீர் திருப்பங்களும் ஏற்படும்.இதன்படி, மிதுனம், கடகம், சிம்மம், துலாம், மகரம் & கும்ப ராசிகாரர்களி்ன் வாழ்வில் சில திருப்பங்கள் ஏற்படும்.

நலம் தரும் குரு பகவான் | Guru Bhagavan Worship benefits

 மிதுன ராசிக்காரர்களுக்கு: பண வரவு அதிகமாக இருக்கும். வேலையில் புதிய மாற்றம் ஏற்படும்.தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும். கணவன்,மனைவி நெருக்கம் அதிகரிக்கும். வாங்கியிருந்த கடன்களை அடைப்பீர்கள், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கடக ராசிக்காரர்களுக்கு:

ஆன்மிக பயணம் செல்வீர்கள், புது வேலை கிடைக்கும், மாணவர்கள் படிப்பில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி வரும். சுப நிகழ்ச்சிகளால்  வீடு களைகட்டும். உற்சாகமாக இருப்பீர்கள்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு:

தடைபட்டு வந்த திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். கணவன்,மனைவி இடையே இருந்த மனகசப்புகள் நீங்கும். புத்திரபாக்கியம் உண்டாகும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு:

பேசுவதற்கு முன் யோசிக்கவும். நீங்கள் யதார்த்தமாக பேசினாலும் அந்த பேச்சு தவறாக புரிந்து கொள்ள நேரிடலாம். உணவு விசயத்தில் கவனம் தேவை. யோகா மற்றும் கோயிலுக்கு சென்றுவர மன அமைதி உண்டாகும்.

மகர ராசிக்காரர்களுக்கு:

புதிய முயற்சிகள் வெற்றி பெறும். அரசு வேலையில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. கூட்டுத்தொழில் செய்ய யாரேனும் முயற்சி செய்தால் அதை சற்று தள்ளிபோடுங்கள். பண விசயத்தில் கவனம் தேவை.

கும்ப ராசிக்காரர்களுக்கு:

பண வருமானம் அதிகரிக்கும். முதலீடுகளுக்கு லாபம் இரட்டிப்பாகும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படலாம். குழந்தைகளுக்கான திருமண காரியம் கைகூடும்.

-பா.ஈ.பரசுராமன்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *