தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்… ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி குறைவு!!

தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்… ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி குறைவு!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.35,352-க்கு விற்பனையாகி வருகிறது.

இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிகரித்து வந்தது. இந்தியாவில் தங்கத்தில் முதலீடு என்பது ஆடம்பரமாக பார்க்கப்படாமல் சேமிப்பு என்ற வகையிலேயே இருக்கிறது. இந்நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ஒரு சவரன் ரூ.35,352-க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.19 குறைந்து ரூ.4,419க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.65.80-க்கு விற்பனையாகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *