மளிகை பொருட்களின் விலை 30% அதிகரிப்பு

மளிகை பொருட்களின் விலை 30% அதிகரிப்பு

வடமாநிலங்களில் பெய்த தொடர் மழைக்காரணமாக விளைச்சல்  பாதிக்கப்பட்டதால் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்பட பல மளிகை பொருட்களின் விலை 30% வரை அதிகரித்துள்ளது.

மளிகை - தமிழ் விக்சனரி

இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் துவரம் பருப்பு, உளுந்து,கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, சோம்பு,சீரகம், கசகசா உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கேரளா,ஏற்காடு, கொல்லிமலை பகுதிகளில் மிளகும், கர்நாடகாவில் பெரிய வெங்காயமும், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் அறுவடை செய்யப்படும் தானிய வகைகள் இந்தியா முழுவதும்  விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பெய்த கனமழையின் காரணமாக தானிய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் ₹200 விற்கப்பட்ட ஒரு கிலோ மிளகாய் வற்றல் 50% அதிகரித்து ₹320க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ₹95க்கு விற்ற ஒரு கிலோ துவரம் பருப்பு ₹105, ₹100க்கு விற்ற உளுத்தம் பருப்பு ₹125, ₹80க்கு விற்ற கொண்டைக்கடலை ₹100, ₹75க்கு விற்கப்பட்ட பட்டாணி ₹80, மிளகு ₹500 என விற்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை வரை இதே விலை தொடரும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *