மத்திய அரசின் கலால் வரி குறைப்பிற்கு பிறகு தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்!!

மத்திய அரசின் கலால் வரி குறைப்பிற்கு பிறகு தமிழகத்தில் பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்!!

மத்திய அரசின் வரியில் அதிரடி விலை குறைப்பிற்கு பின் பெட்ரோல், டீசல் விலையில் பெருமளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதற்கிடையில், இடைத்தேர்தலில் பலத்த பின்னடைவை சந்தித்ததால் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது. இந்திய மக்களுக்கு தீபாவளி பரிசு என சொல்லித் தரப்பட்ட இந்த விலைக்குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலை குறைப்பு வாகன ஓட்டிகள் மற்றும் சாமானிய மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *