சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவிப்பு!!

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவிப்பு!!

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ, கடந்த 2004ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதே ஆண்டில், தனது முதல் டெஸ்டில் விளையாடினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டி20 போட்டிகளிலும் களமிறங்கினார். இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள், 90 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் 38 வயதான டுவைன் பிராவோ, சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஆடிவரும் அவர், அபுதாபியில் நாளை நடக்கும் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் டுவைன் பிராவோ விளையாடி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *