சரிவில் தங்கத்தின் விலை; இன்றைய விலை நிலவரம்!!

சரிவில் தங்கத்தின் விலை; இன்றைய விலை நிலவரம்!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 22 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை பெரிதளவில் மாற்றங்கள் இன்றி ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது. மாதம் முழுவதும் ரூ.35 ஆயிரத்திலேயே நீட்டித்து வந்த தங்கம் விலை நேற்று ஏற்றத்தை கண்டது. கிராமுக்கு ரூ.18 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,452க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.35,616க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.176 குறைந்திருக்கிறது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.4,430க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.35,440க்கு விற்பனையாகிறது. அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *