தனுஷ்- மாளவிகா மோகன் இணையும் படத்தின் புது அப்டேட்!

தனுஷ்- மாளவிகா மோகன் இணையும் படத்தின் புது அப்டேட்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ரிலீஸ்க்காக வெயிட்டிங். தற்போது இந்த படத்தின் ஷூட் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ரிலீஸ்க்காக வெயிட்டிங். இந்த நிலையில் இன்னொரு பக்கம் பாலிவுட் படமான ‘அட்ராங்கி ரே’வின் இறுதி கட்ட படப்பிடிப்பும் போய் கொண்டிருக்கிறது.

மாரி செல்வராஜ்ஜின் ‘கர்ணன்’ படமும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்த நிலையில் கார்த்திக் நரேனுடன் தனுஷ் இணையும் டி-43 படத்தில் மாளவிகா மோகனன் இணைகிறார் என கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்திருந்தது படக்குழு.

படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் நிலையில் இந்த படத்தின் 3 பாடல்களுக்கான வேலை முடித்து தற்போது நான்காவது பாடலுக்கான ரெக்கார்டிங்கும் தொடங்கியுள்ளதாக அப்டேட் கொடுத்துள்ளார் ஜிவி.

படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் டிசம்பரில் பூஜை தொடங்கி அடுத்த வருடம் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *