வலிமை Glimpse வீடியோ செய்த சாதனை!! ரசிகர்களை உற்சாகம்!!

வலிமை Glimpse வீடியோ செய்த சாதனை!! ரசிகர்களை உற்சாகம்!!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் தல அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நடிக்க யோகி பாபு, கார்த்திகேயா, ராஜ் ஐயப்பா என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இருந்து Glimpse வீடியோ வியாழக்கிழமையான நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று யூட்யூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இதை வீடியோ 40 நிமிடங்களில் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இது தல ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. தொடர்ந்து 728K லைக்குகளை 15 மணி நேரத்தில் பெற்று இந்தியாவில் அதிவேக லைக்குகளை பெற்ற கிளிம்ப்ஸ் ஆக உருவெடுத்துள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்திற்கும் கிளிம்ப்ஸ் வெளியிடப்படுமா அது வலிமையின் சாதனையை முறியடிக்குமா என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *