நாயகியாக அறிமுகம் ஆகும் அஜித்தின் ரீல் மகள் அனிகா!

நாயகியாக அறிமுகம் ஆகும் அஜித்தின் ரீல் மகள் அனிகா!

விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்திருந்த அனிகா மலையாளத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த சில நாட்களாகவே இணையத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர், காதலை மையப்படுத்தி உருவாக உள்ள படத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.


என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருந்தவர் அனிகா. அந்த படத்திலும் கிட்டதட்ட அஜித் மகள் தான். அதேபோல விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வெளியான குயின் வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்.

மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவருக்கு, 15 வயது ஆகிறது. இந்நிலையில், மலையாளத்தில் பள்ளி மற்றும் கல்லூரி கால காதலை மையமாகக் கொண்டு உருவாக உள்ள படத்தில் நாயகியாக நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற நடிகர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. லாக்டவுன் சமயத்தில் நடிகைகள் வெளியிடும் போட்டோஷூட் அவர்களுக்கான வாய்ப்பை சுலபமாக பெற்றுத்தந்து விடுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *