கன்னட நடிகர் துருவா சார்ஜாவுக்கு கொரோனா பாதிப்பு… மனைவியுடன் மருத்துவமனையில் அனுமதி!

கன்னட நடிகர் துருவா சார்ஜாவுக்கு கொரோனா பாதிப்பு… மனைவியுடன் மருத்துவமனையில் அனுமதி!

கன்னட சினிமா நடிகரும், நடிகர் அர்ஜூனின் உறவினரும் ஆன துருவா சார்ஜாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் அவர் குணமடைய வேண்டும் என ட்விட்டரில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் அர்ஜூனின் சகோதரி மகன். சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன், 420 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்தபோது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவி இறந்து ஒரு மாதம் ஆனதை அடுத்து குடும்பத்தினர் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் குடும்பத்தினர் அனைவரும் சிரஞ்சீவி புகைப்படம் முன்பு நின்று போட்டோ எடுத்து வெளியிட்டனர். சகோதரரின் பிரிவால் தவிப்பதால துருவா சார்ஜா சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் துருவா தனது ட்விட்டர் பக்கத்தில், “நானும் எனது மனைவியும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம். லேசான அறிகுறிகள் தான் என்றாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். விரைவில் நலம்பெற்று திரும்புவோம். எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள்.” என்று எழுதியுள்ளார்.

இதனையடுத்து கன்னட திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர். பலரும் இவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *