1993-ம் ஆண்டு வெளியான ‘கன்யாகுமரியில் ஒரு கவிதா’ என்ற மலையாள படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்

அனில் முரளி. நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா, கொடி, தொண்டன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் ஒரு சில தெலுங்கு மொழிப் படங்கள் என 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு சுமா என்ற மனைவியும், ஆதித்யா என்ற மகனும், அருந்ததி என்ற மகளும் உள்ளனர்.
கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று (வியாழக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 56.




