தமிழ் திரையுலகில் தனக்கு என ரசிகர் கூட்டத்தை கொண்டவர் தல அஜீத் குமார்.

தன் ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் தன் படத்தின் ரிலீஸ்ஸின் போது மிகப்பெரிய ஓப்பனிங் கொண்ட ஒரே நடிகர் எப்போதும் பொது வெளியில் அதிகமாக விளம்பரம் படுத்தி கொள்ளாத அஜீத் மற்றவர்களுக்கு உதவி செய்வதையும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார். அப்படி உதவி செய்தாலும் தன் தான் உதவினேன் என்று யாரிடமும் சொல்ல கூடாது என உறுதி வாங்கி கொள்வார். இதனால் தான் இவர் ஒரு நடிகர் என்பதை விட நல்ல மனிதர் என்று அனைவராலும் மதிக்கப்படுகிறார்.

கடைசியாக வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை என்ற படத்தில் நடித்தார் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார் முழுவதும் ஆக்ஷன் கலந்த இந்த படத்தை வித்தியாசமான முறையில் இயக்கி வருகிறார், இந்த படத்திற்கு “யுவன் ஷங்கர் ராஜா”இசை அமைத்து வருகிறார் இதுவரை 40 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்க பட்டுள்ளது நிலைமை சீர் அடைந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடரும்.

பொதுவாக தன் திரைப்படங்களின் ப்ரோமோஷன் மற்றும் விருது வழங்கும் விழாக்களில் அஜீத் பங்கு கொள்ள மாட்டார் அப்படி தன்னை வற்புறுத்தி கூப்பிட்டாலும் வரமாட்டார். கலைஞர் முதல்வராக இருந்தபோது அவரை வற்புறுத்தி கூப்பிட்டார்கள் என விழா மேடையிலேயே தைரியமாக சொன்னவர் நம்ம தல அஜீத்.

அதே போல் சில விழாக்களில் தானே விருப்பப்பட்டு சென்ற விழாக்களும் உண்டு. அப்படி ஒரு விழாதான் “டான்ஸ் யூனியன் “சார்பாக நடந்த கலைவிழாவில் கலந்து கொண்ட அவர் விழா மேடையில் தோன்றி பேசி கொண்டு இருந்தார். அப்போது பிரபல டான்ஸ் மாஸ்டர்களான ராஜீசுந்தரம் மற்றும் தினேஷ் வற்புறுத்தவே அவர் மேடையில் ஆடினார் அந்த வீடியோ இப்பொது ட்ரெண்ட் ஆகிவருகிறது.