“விஸ்வாசம் 2” வில் அருண் விஜய் நடிக்கிறாரா சமூக வலைத்தளத்தில் கசிந்த புகைப்படங்கள்?

“விஸ்வாசம் 2” வில் அருண் விஜய் நடிக்கிறாரா சமூக வலைத்தளத்தில் கசிந்த  புகைப்படங்கள்?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அருண் விஜய் “முறைமாப்பிள்ளை” என்ற படத்தில் அறிமுகமாகிய அருண்விஜய் ஆரம்பக்கட்ட காலங்களில் முன்னணி நடிகராக வலம் வர மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தார்.

பல திறமைகளை கொண்ட அருண்விஜய்க்கு திருப்புமுனையாக ஒரு படம் கூட அமையவில்லை.பலநாள் வெற்றிக்காக போராடிவந்த அருண் விஜய்க்கு, திருப்புமுனையாக வந்த திரை படம் தான் தல அஜீத் நடிப்பில் வெளிவந்த “என்னை அறிந்தால்” திரைப்படம் பலநாள் பசிக்கு தீனி போட்டது போல் அந்த படத்தில் வில்லனாக தோன்றிய அருண் விஜய் முழுத்திறமையும் வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

படம் முடிந்து முதல் காட்சியில் அஜீத் ரசிகர்கள் கூட அந்த கதாபாத்திரத்தின் பெயரான “விக்டர் “என்ற பெயரை கரகோஷம் செய்து அவரை குதுகலபடுத்தினர்.

இதன் மூலம் அருண்விஜய் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார். அதன் பின்னர் அவருக்கு நல்ல கதைகளாகவே அமைந்தது, தற்போது இவர் தமிழில் முன்னணி நடிகராக வளம் வருகிறார்.

இறுதியாக இவரது நடிப்பில் “மாபியா” என்ற திரைப்படம் வெளி வந்தது இப்படம் கலவையான விமர்சனம் பெற்றது. அடுத்து இவரது நடிப்பில் சினம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த படத்திற்காக அருண் விஜய் “கிடா மீசையுடன்” பக்கா கிராமத்து கெட்டப்பில் உள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த அஜீத் ரசிகர்கள் தூக்குதுறையின் தம்பிபோல் உள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *