போதை பொருள் தடுப்புப் பிரிவில் ஆஜரானார் ஆர்யன் கான்!!

போதை பொருள் தடுப்புப் பிரிவில் ஆஜரானார் ஆர்யன் கான்!!

மும்பை உயர்நீதிமன்ற நிபந்தனையின் படி இன்று போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் ஷாருக்கான் மகன் ஆரியன் கான்.

டெல்லி, அக்டோபர் 3ம் தேதி மும்பையில் இருந்து கோவா புறப்பட்ட சொகுசு கப்பலில் போதைப் பொருட்களுடன் நடந்த “ரேவ் பார்ட்டி”-யில் வைத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் கைது செய்யப்பட்டார்.

பின்னர் பல நாள் விசாரணை, சிறைவாசத்திற்கு பிறகு அக்டோபர் 29ம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் ஆரியன் கானுக்கு 14 நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது; ஜாமீன் தொடர்பான ஆவணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தினால் 30ம் தேதி நண்பகல் ஆர்தர் சாலை சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்றம் ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கியபோது 14 நிபந்தனைகள் விதித்தது. குறிப்பாக, ஓவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆரியன்கான் மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் காலை 11- 02 மணிக்குள் ஆஜராகி கையெழுதிட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் இன்று மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

மும்பை உயர்நீதிமன்றம் கொடுத்துள்ள 14 நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை ஆரியன் கான் மீறினால் அவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய கோரி போதை பொருள் தடுப்பு பிரிவு முறையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *