தமிழுக்கு வருகிறார் ‘அய்யப்பனும் கோஷியும்’ புகழ் நஞ்சியம்மா…

பிரபல மலையாள பாடகி நஞ்சியம்மா தமிழில் உருவாகி வரும் சீன் நம்பர் 62 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

மலையாள திரையுலகில் மட்டுமில்லாது தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இத்திரைப்படத்தில் நஞ்சியம்மா பாடிய கலக்காத… பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

யூடியூபிலும் 40 மில்லியன் பார்வைகளை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் தமிழில் உருவாகி வரும் சீன் நம்பர் 62 திரைப்படத்திற்காக உயிரோட்டமுள்ள பாடல் ஒன்றை அவர் பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பாடல் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உற்சாகத்தை கிளப்பியுள்ளது.

மேலும் இத்திரைப்படத்தில் பிக் பாஸ் புகழ் ஆஜீத் காலிக்கும் ஒரு அசத்தலான பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்துறை குறித்து தமிழில் ஏற்கனவே திரைப்படங்கள் வெளியாகி உள்ள போதிலும், இதுவரை யாரும் தொடாத ஒரு கதைக்களத்தில் உருவாகி வருகிறதாம் திகில் கலந்த க்ரைம் திரில்லரான ‘சீன் நம்பர் 62’ திரைப்படம்.

பவன்புத்ரா பிலிம் புரொடக்ஷனின் நிகில் ஆர் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவார். பௌதிஷ், அமல்தேவ், கோகிலா கோபால், ஜாய்ஸ் எலிசபெத், வி ஜே வைத்தி, ஐஸ்வர்யா நாயர் மற்றும் ராகந்த் என திரையுலகின் நட்சத்திர பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் சீன் நம்பர் 62′ படமாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் ‘இரட்டையர்’ மற்றும் தெலுங்கில் ஓய் இடியட் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிகேவி, ‘சீன் நம்பர் 62’-க்கு இசை அமைக்கிறார். விஜய் வெங்கட் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *