நடிகர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா

நடிகர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா

பிரபல ஆங்கிலப்பத்திரிகையான போர்ப்ஸ், இந்திய சினிமாவில் இன்ஸ்டாகிராம், சமூக வலைத்தளம் மூலம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள முதல் 30 சினிமா பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், பாலிவுட் பிரபலகங்ளை விட தென்னிந்திய சினிமா பிரபலங்கள்தான் அதிகமாக இடம்பெற்றுள்ளனர்.

முதல்10 இடங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனா 10க்கு 9.88 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். தமிழ் நடிகரான சூர்யா 9.37 புள்ளிகள் பெற்று 9வது இடத்தையும், தமிழ் நடிகரான தனுஷ் 9.33 புள்ளிகள் பெற்று 13வது இடத்தையும், விஜய் சேதுபதி 9.22 புள்ளிகள் பெற்று 29வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பிரபலங்களின் பதிவுகளுக்குக் கிடைக்கும் லைக்குகள், பதில்கள், அவர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை, வீடியோ பார்த்தவர்கள் எண்ணிக்கை, பதிவுகள் சென்றடைந்தவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்களின் சமீபத்திய பதிவுகள் இந்த விவரங்களுக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

முதல் பத்து இடங்களில் உள்ளவர்கள் பட்டியல்

  1. ராஷ்மிகா மந்தனா – 9.88
  2. விஜய் தேவரகொண்டா – 9.67
  3. யாஷ் – 9.54
  4. சமந்தா – 9.49
  5. அல்லு அர்ஜுன் – 9.46
  6. துல்கர் சல்மான் – 9.42
  7. பூஜா ஹெக்டே – 9.41
  8. பிரபாஸ் – 9.40
  9. சூர்யா – 9.37
  10. தமன்னா – 9.36

இவர்களைத் தொடர்ந்து மகேஷ் பாபு, அனுஷ்கா ஷெட்டி, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *