Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

பிக்பாஸ் 4ல் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் இறுதி பெயர் பட்டியல்: அடடே! இவர்கள் எல்லாம் இவ்வளவு நாள் லிஸ்டிலேயே இல்லையே!

September 29, 2020

வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி பிக்பாஸ் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இறுதி பட்டியலாக போட்டியாளர்கள் பெயர்கள் வெளியாகியுள்ளது அவர்களைப் பற்றிய விவரங்களை காண்போம்

ரம்யா பாண்டியன்:

SSC தேர்வு – தமிழ் உட்பட 13 மொழிகளில் எழுதலாம்

‘தாய்த்தமிழில் வழிபாடு வேண்டும்’ சமஸ்கிருதம் எதற்கு? சீமான் கொந்தளிப்பு

‘திருச்சிற்றம்பலம்’ படம் ₹100 கோடி வசூல் சாதனை

2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோக்கர் திரைப்படத்தில் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் உறவினர் ஆவார். ஜோக்கர் திரைப்படத்திற்கு பிறகு சமுத்திரக்கனியுடன் ஆண் தேவதை திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரின் திரைப்படங்களை விட இவர் வெளியிட்ட மொட்டை மாடி புகைப்படங்களின் மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். அதன் பிறகு குக் வித் கோமாளி ஷோவில் பங்கேற்றார். ரம்யா – புகழ் காம்பினேஷன்காகவே அந்த ஷோவை பலரும் பார்த்தனர், அதில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். பிறகு கலக்க போவது யாரு ஷோவில் நடுவராகவும் இருந்தார். இந்நிலையில் இவர் பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரியோ ராஜ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கானா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரின் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ரியோராஜ். பிறகு சன் மியூஸிக்கில் ஆங்கராக பல ஷோக்களை தொகுத்து வழங்கி பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார். பிறகு இவருக்கு விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரின் மூன்றாவது சீசனில் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் பல ஷோக்களையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். பின்பு 2019 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமானார், படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. தனது எதார்த்த பேச்சினால் அனைவரையும் மகிழ்விக்கும் ரியோ பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் எப்படி இருப்பார் என்பதை காண சற்று ஆவலாகவே உள்ளது.

ரேகா:

80’s , 90’s கிட்ஸ்களால் மறக்க முடியாத கேரக்டர் ஜெனிஃபர் டீச்சர். நடிகை ரேகா கடலோர கவிதைகள், புன்னகை மன்னன், பொம்முக்குட்டி அம்மாவுக்கு, எங்க ஊரு பாட்டுக்காரன், சிகரம் போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர். தற்பொழுது குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் டிவியின் குக்கூ வித் கோமாளி ஷோவில் பங்கேற்றார். இவரும் பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அனிதா சம்பத்:

போட்டியாளர்கள் பட்டியலில் யாரும் சிறிதும் எதிர்பாராமல் சேர்ந்த புதுவரவு தான் பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். இளைய தளபதியின் சர்க்கார் திரைப்படத்தில் நிமிட காட்சியில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அவரின் தமிழுக்கு என்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பல. சர்க்கார் திரைப்படத்திற்கு பிறகு திரைப்படங்களிலும் வெப் சிரிஸ்களிலும் நடித்து வருகிறா. ர் தவறென்று தெரிந்தால் சிறிதும் தயங்காமல் தட்டிக் கேட்க்கும் அனிதா சம்பத் பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதாக புது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறந்தாங்கி நிஷா:

திறமைக்கு நிறம் தடையில்லை என நிரூபித்துக் காட்டி பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர் அறந்தாங்கி நிஷா. கலக்க போவது யாரு போட்டியாளராக வந்து நின்று ஜெயித்துக் காட்டி தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். வெள்ளித்திரையிலும் வெற்றிக்கொடி ஏற்றி வரும் நிஷா பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார். மேலும் சமூகத்தில் நடக்கும் விரும்பத்தகாத விஷயங்களுக்கு எதிராக குரல் எழுப்பியும் வருகிறார். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் கலகலப்பாக இருந்து வரும் நிஷா பிக்பாஸ் வீட்டிலும் அதை கடைப்பிடிப்பாரா என்பது இனி வரும் காலங்களில் தான் தெரியும்.

ஆஜித் காலிக்:

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான சூப்பர் சிங்கர் ஜூனியர் ஷோவில் மூன்றாவது சீஸனின் வெற்றியாளர் ஆஜித் காலிக். இவருக்கு ஆஸ்கார் வெற்றியாளர் இசையம்மைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கைகளால் விருது வழங்கப்பட்டது. சினிமாவில் பின்னணி பாடகராக இருக்கும் ஆஜித் பிக்பாஸில் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சனம் ஷெட்டி:

நடிகை மற்றும் விளம்பர மாடல் சனம் ஷெட்டி பிக்பாஸ் சீசன் மூன்றிலேயே வைல்ட் கார்டு எண்ட்ரியாக வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர். பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லாமலேயே அன்றைய தேதியில் பல பரபரப்பான திருப்பங்களை கொடுத்தவர். பிக்பாஸ் முடிந்த பிறகு கூட இவர் சம்மந்தப்பட்ட செய்திகள் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டு தான் இருந்தன. தர்ஷன் உடனான காதல் முறிவுக்கு பிறகு இப்பொழுது இவர் நான்காவது சீசனில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷிவானி நாராயணன்:

விஜய் டிவியின் ஆண்டாள் அழகர் தொடரின் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்கட்சிகளில் தொடரின் நாயகியாக நடித்து கொண்டிருந்தார். இவர் தற்போது பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொள்ள போகிறார். சமூக வலைத்தளங்களில் இவர் இடும் புகைப்படங்களுக்கு வரவேற்புகள் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவு எதிர்மறை விமர்சனங்களும் உண்டு. இவர் பிக்பாஸ் சென்ற பிறகு தான் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு எந்த அளவு ஆதரவு இருக்கின்றது என தெரியும்

கேப்பிரியல்லா:

விஜய் டிவியின் டான்ஸ் ஷோ மூலம் மக்களிடையே அறிமுகமானவர் கேப்பிரியில்லா. அதன் பின் மூன்று திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார், சமுத்திரக்கனியின் அப்பா திரைப்படத்திலும் நடித்திருந்தார். தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்களின் மூலமாக ரசிகர்களை கிறங்கடித்து கொண்டிருக்கும் இவர் பிக்பாஸில் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அர்ச்சனா:

சன் டிவியின் இளமை புதுமை மற்றும் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையை விட்டு ஒதுங்கியிருந்தவர், சில வருடங்களுக்கு முன் மீண்டும் ரீ – என்ட்ரி கொடுத்தார். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கென தனித்துவம் தெரியுமாறு நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். இவரது நிகழ்ச்சிகளுக்கென ரசிகர்கள் பல பேர் உள்ளனர். தனது சிரிப்பு மற்றும் பேச்சில் முழுக்க முழுக்க நேர்மறை எண்ணங்களை மட்டுமே மக்களிடம் கொண்டு செல்லும் அர்ச்சனா பிக்பாஸில் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரி:

இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டைச்சுழி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஆரி. நெடுஞ்சாலை திரைப்படத்தில் முற்றிலும் வித்தியாசமான தோரணையுடனும் முகபாவனையுடனும் நடித்திருப்பார். இந்த திரைப்படத்திற்காக விருதுகளும் பெற்றார். மாயா திரைப்படத்திலும் நடித்திருந்தார். நடிகராகவும் பிட்னெஸ் டிரைனராகவும் இருக்கும் ஆரி பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் என சொல்லப்படுகிறார்.

ஜித்தன் ரமேஷ்:

ஜித்தன் ரமேஷ் என மக்களால் அறியப்படும் ரமேஷ் சௌத்ரி தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியின் மகன் மற்றும் நடிகர் ஜீவாவின் அண்ணன் ஆவர். சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் பிக்பாஸ் நான்காவது சீஸனின் போட்டியாளர்களில் ஒருவர்.

பாலாஜி முருகதாஸ்:

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக கருதப்படும் பாலாஜி முருதாஸ் நடிகர் மற்றும் மாடல் ஆவார். பல நாடுகளில் நடைப்பெற்ற ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று விருதுகளையும் வாங்கியுள்ளார். மேலும் டைசன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தமிழ்நாட்டில் திரை அரங்குகள் திறக்கப்படுமா?

Next Post

கடைசியா இவரும் வந்து விட்டார் ஓ. டி. டி பக்கம்…

Next Post

கடைசியா இவரும் வந்து விட்டார் ஓ. டி. டி பக்கம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version