ஐரோப்பா வாக மாறும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி!!!

ஐரோப்பா வாக மாறும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி!!!
பாகுபாலி என்ற படத்தின் மூலம் இந்திய மக்களை திரும்பிப்பார்க்க வைத்தவர் நடிகர் பிரபாஸ், அந்த படத்தின் மாபெரும் வெற்றிக்குப்பிறகு அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சகோ இந்த படம் கலவையான விமர்சனம் பெற்றது.

இந்த திரைப்படத்திற்கு அடுத்த படியாக ராதா கிருஷ்ணகுமார் என்பவரின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ‘ராதே ஷியாம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் ஏர்டெல் விளம்பர நடிகை சாஷா சேத்ரி படத்தில் பூஜா ஹேக்டேவின் தங்கையாகவும் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஐரோப்பாவில் நடக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த காதல் கதை தான் இந்தப் படம். கதையின் படி, இந்தக் காதல் ரோம் மாநகரில் நடக்கிறது. படக்குழு ஜார்ஜியா செல்ல திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் அது நடக்கவில்லை. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக ராமோஜி பிலிம் சிட்டியில் மிகப்பெரிய செட் போடப்பட்டு வருகிறதாம்.
முந்தைய ரஷ்ய நாட்டில் வீதிகள், வீடுகள் என்று பிரமாண்ட படப்பிடிப்பு செட் போடப்பட்டு வருகிறது. பழமை கால ரஷ்ய கட்டிடங்களும் கட்டப்பட உள்ளன.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *