முதல் முறையாக இயக்குனரான Chocolate Boy மாதவன் – தெறிக்கும் ராக்கெட்ரி பட டிரைலர் !

முதல் முறையாக இயக்குனரான Chocolate Boy மாதவன் – தெறிக்கும் ராக்கெட்ரி பட டிரைலர் !

மாதவன் தற்போது ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 6 மொழிகளில் வெளியாகவுள்ள ராக்கெட்ரி – நம்பி விளைவு (Rocketry – The Nambi Effect) படத்தில் கதாநாயகான நடித்தது மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாதவன் ஒரு பேட்டியில், “நான் இந்த படத்தில் 75 வயது முதியவராக நடிக்கிறேன். எனக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் அவர்கள் நடிக்கிறார், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த குறையும் இல்லாமல் இந்த படம் பூர்த்தி செய்யும்” என தெரிவித்து இருந்தார்.

தற்போது ராக்கெட்ரி படத்தின் வெறித்தனமான டிரைலர் வெளியாகி உள்ளது. நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன் என ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த டிரைலரை தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.

“ஒரு நாயை அழிக்க அதற்கு வெறிநாய் என பட்டம் கட்டினாலே போதும் என்றும், அது போல ஒரு மனுஷனை தலை தூக்க முடியாத அளவுக்கு அடிச்சி கொல்லணும்னா அவனுக்கு தேச துரோகின்னு பட்டம் கொடுத்தா போதும்” என வசனங்கள் பட்டையைக் கிளப்புகின்றன. இந்த கோடையில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *