‘கர்ணன்’ வெளியீடு எப்போது?

‘கர்ணன்’ வெளியீடு எப்போது?

தனுஷ்ஷின் ‘கர்ணன்’ படம் ரிலீஸ் குறித்தான அப்டேட் கிடைத்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கர்ணன்’. உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது.

ஷுட்டிங் தொடங்கி பரபரப்பாக நடந்து கொண்டிருந்த போதுதான் கொரோனா சூழல் வந்ததால் ஷூட் தடைப்பட்டது. அதன் பிறகு, தற்போது பாதுக்காப்போடும் அரசு விதிமுறைகளோடும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. கொரோனா சூழலுக்கு முன்பாகவே பத்து சதவிகித படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருந்த நிலையில், தற்போது அது முடிந்துள்ளது.

READ MORE- விஜே நக்ஷத்ரா நாகேஷ் நிச்சயதார்த்த வீடியோ!

படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். படப்பிடிப்பு முடிந்துள்ளது என மாரி செல்வராஜூடன் படப்பிடிப்பில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து தனுஷ் தனது நன்றியை தெரிவித்து இருந்தார். அதன் பிறகு, தற்போது படம் இந்த வருடம் சம்மர் ரிலீஸாக அதாவது ஏப்ரல் 9 இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *