தனுஷ் நடிக்கும் ’ஜகமே தந்திரம்’ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிப்பு…!!

தனுஷ் நடிக்கும் ’ஜகமே தந்திரம்’ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிப்பு…!!

தனுஷ் நடிக்கும் ’ஜகமே தந்திரம்’ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதத்தில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிப் போனது. இதனால், ஜகமே தந்திரம் ஓடிடியிலா/தியேட்டரிலா என்ற விவாதங்கள் நடந்துகொண்டிருந்த நிலையில், சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில், ‘ஜகமே தந்திரம்’ வரும் ஜுன் 18 ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இதனால், தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்கள் ஆவலுடன் படத்திற்க்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *