சென்னை – ஹைதரபாத் அணிகள் இன்றைய போட்டியில் மோதல்… சென்னை அணியின் ஆதிக்கம் தொடருமா…?

சென்னை – ஹைதரபாத் அணிகள் இன்றைய போட்டியில் மோதல்… சென்னை அணியின் ஆதிக்கம் தொடருமா…?

சென்னை – ஹைதரபாத் அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

ஐபிஎல் 2021 தொடரின் 23-வது லீக் போட்டியில் சென்னை – ஹைதரபாத் அணிகள் இன்று மோதுகின்றன. சிஎஸ்கே அணி இதுவரை மும்பை வான்கடே மைதானத்தில் வெற்றி பெற்று வந்த நிலையில் அடுத்த போட்டிகள் டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

சிஎஸ்கே 5 போட்டிகளில் விளையாடி 4 -ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே முதலிடத்திற்கு முன்னேறும். இதற்கு மாறாக 5 போட்டிகளில் விளையாடி உள்ள சன்ரைசர்ஸ் அணி 1 வெற்றி மட்டும் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. 

இதனிடையே  ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக விளையாடமல் இருந்த மொயீன் அலி அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. டெல்லி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இம்ரான் தாஹீர் அணியில் நீடிக்க வாய்ப்புள்ளது. இதனால் பிராவோ இன்றைப் போட்டியில் களமிறங்குவது கேள்விக்குறியாகவே உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *