அசுரனுக்காக விருதுகளை குவிக்கும் தனுஷ்!

அசுரனுக்காக விருதுகளை குவிக்கும் தனுஷ்!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய சர்வதேச கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆறாவது பிரிக்ஸ் பட விழாவில் சிறந்த நாயகனுக்கான விருதினை தட்டிச் சென்றுள்ளார் தனுஷ்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் சார்பில் பிரிக்ஸ் திரைப்பட விழா 2016ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் படங்கள் திரையிடப்பட்டு அவற்றிற்கு விருதுகள் வழங்கப்படும்.

இந்நிலையில் 6வது பிரிக்ஸ் திரைப்பட விழா கோவாவில் 52வது சர்வதேசத் திரைப்பட விழாவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் சிறந்த நடிகருக்கான விருது ‘அசுரன்’ தமிழ்ப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது.

ஏற்கெனவே, இந்தப் படத்திற்காக அவர் இந்திய அளவில் வழங்கப்படும் தேசிய விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருது பெற்றது குறித்து டிவிட்டர் தளத்தில், “ஒரு முழுமையான மரியாதை” என நடிகர் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

‘ஆன் வீல்ஸ்’ என்ற பிரேசிலியன் திரைப்படத்தில் நடித்த லாரா போல்டோரினி சிறந்த நடிகை விருதைப் பெற்றார். ‘பராகத்’ என்ற தென்னாப்பிரிக்கத் திரைப்படமும், ‘தி சன் அபவ் மீ நெவர் செட்ஸ்’ என்ற ரஷியத் திரைப்படமும் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பகிர்ந்து கொண்டன.

பிரேசிலியன் இயக்குனர் லுசியா முராத், ‘அனா’ என்ற டாகுமென்டரி படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றார். ‘எ லிட்டில் ரெட் பிளவர்’ என்ற சீனப் படத்தை இயக்கிய இயக்குனர் யான் ஹான் சிறப்பு குறிப்பீடு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *