3 வேளாண் சட்ட ரத்து மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் !

3 வேளாண் சட்ட ரத்து மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் !

3 வேளாண் சட்ட ரத்து மசோதாவை நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று தாக்கல் செய்தார்.

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. மேலும்,இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.அதன்படி, நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில்,3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டது.

ஆனால்,நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே,பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மக்களவை எம்பிக்கள் சபாநாயகர் வெங்கைய்ய நாயுடு அவர்களின் இருக்கையை முற்றுகையிட்டும்,முழக்கத்தையும் எழுப்பி வந்தனர்.

இதன்காரணமாக,நாடாளுமன்ற மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில்,12 மணிக்கு தொடங்கிய மக்களவையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை எம்பிக்கள் ஒப்புதல் அளித்தனர்.இதனையடுத்து, 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்ட ரத்து மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஓராண்டு காலமாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இதனைத் தொடர்ந்து தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *